Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

முறையாக அறிவிக்காமல் துவங்கிய புதிய கால்வாய் அமைக்கும் ஜேசிபி தடுத்து முற்றுகை

புதுக்கோட்டை, அக். 14: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் ஆர்டிஓ சாலை முதல் டிவிஎஸ் செல்லும் சாலை வரை புதிய கால்வாய் அமைக்கும் பணி மற்றும் விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆனால், இப்பணிகள் தொடங்குவது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினருக்கோ எந்த ஒரு முன்னறிவிப்பும் அதிகாரிகளால் முறையாக தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டிக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் பணியைத் தொடங்க வந்தபோது, மாமன்ற உறுப்பினரின் அண்ணனும் சமூக ஆர்வலருமானச பெரியார் நகர் சிவா இயந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலைந்து சென்றனர்.