அறந்தாங்கி, அக். 14: அறந்தாங்கியில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15ம்தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு இத்தகவலை அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


