பொன்னமராவதி, அக். 14: பணப்புழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ் நாட்டை தவெக அரசு உருவாக்கி உள்ளது என முன்னாள் அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் திட்ட பணிகள் குறித்தும் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொன்னமராவதி பேருந்து நிலைய மேம்பாட்டுப்பணி, தாலுகா அலுவலகத்தில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். இதில் திமுக ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன், நகராட்சித்தலைவர் சுந்தரிஅழகப்பன், துணைத்தலைவர் வெங்கடேஷ், திமுக நிர்வாகிகள் பழனிச்சாமி, முருகேசன், மணி, இளையராஜா, சீமாட்டி லத்திப், ஆலவயல் முரளிசுப்பையா, செல்வம், கணேசமூர்த்தி, சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


