Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டையில் ஜமாபந்தி

கந்தர்வகோட்டை, ஜூன்.13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வடிவேல் பிரபு தலைமையில் வட்டாட்சியர் பரணி முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் 16ம் தேதி புதுநகர் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் 17ம் தேதி கல்லாக்கோட்டை சரகத்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் 18ம் தேதி கந்தர்வகோட்டை சரகதிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் மேற்கண்ட நாட்களில தவறாது வருவாய் தீர்வாயத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்பித்து பயன்பெறுமாறு வட்டாட்சியர் பரணி தெரிவித்து கொள்கிறார்.