Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கறம்பக்குடி அருகே கேங்மேன் தூக்கிட்டு தற்கொலையா?

கறம்பக்குடி, ஜூன் 13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மூக்கைபுடையான் பள்ளம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). இவர் ரெகுநாதபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கடந்த 4 வருடங்களாக கேங் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி கிடைக்காததால் அவரது மனைவி ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த இந்நிலையில் ஜெய்சங்கர் தட்டாமனை பட்டி அருகே உள்ள செம்புலிச்சை குள கரையில் உள்ள மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் தொங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். ஜெய்சங்கர் தற்கொலை செய்து கொண்டார அல்லது கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.