மாணவர்களை அச்சுறுத்தி வரும் பள்ளி மரத்தின் மீது உரசி செல்லும் மின்கம்பி சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
அறந்தாங்கி, நவ.12: அறந்தாங்கியில் பள்ளியின் அருகே மரத்தின் மீது உரசிச் செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அகில்கரை பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியின் வாசலில் செல்லும் மின்சாரகம்பி மரத்தில் உரசிக் கொண்டு செல்கிறது.
Advertisement
இதனால் மழை நேரத்தில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது.இதனால் பள்ளி குழந்தைகள் உள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பள்ளியின் வாசலில் செல்லும் மின்சார கம்பியை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Advertisement