கறம்பக்குடி செப். 11: கறம்பக்குடி அருகே பெட்டிகடையில் குட்கா பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தட்டாமனைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (37). இவர் தட்டாமனைபட்டி கிராமத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.
இவரது பெட்டி கடையில் குட்கா விற்பனை செய்வதாக ரெகுநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலம்பரசன் அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 9 அரை கிலோ குட்காவை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


