Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுகை அருகே வாலிபர் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓட்டம்

புதுக்கோட்டை, செப். 11: புதுகை அருகே வாலிபர் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓட்டம் மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை நரிமேடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (எ) கடல் விஜய் (37). இவர் புதுகை வடக்கு 2வது வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜய்யை மறித்து, தாங்கள் வைத்திருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த புதுகை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.