அறந்தாங்கி, செப். 11: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக முனைவர் சரளா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 28 ஆண்டுகள் அரசு கல்லூரி பணி அனுபவமிக்கவர், இதற்கு முன்னதாக திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். தற்போது பதவி உயர்வு பெற்று, அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்.
+
Advertisement


