Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனைக்கு அமரர் வாகனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கமா?

கந்தர்வகோட்டை, ஜூன் 11: கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனைக்கு அமரர் வாகனம் வழங்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் அரசு மருந்துவமனை உள்ளது. இங்கு தினசரி 700 மருந்துவ பயனாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லுகிறார்கள். இது முழுநேர மருந்துவமனை என்பதால் சாலை விபத்து, விஷ சந்துக்கள் கடிபட்டவர்கள், அவசர சிகிச்சைக்கு வரும் நிலை எதிர்பாரா விதமாக இறக்க நெரிட்டால் உடற்கூறு ஆய்வு செய்ய புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பவேண்டி உள்ளது.

அமரர் ஊர்தி வரும்வரை இறந்தவர் உடலை மருந்துவமனையில் வைத்து இருக்கும் நிலையில் உறவினர் அலறல் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது. எனவே அவசரகால ஊர்தி 108 இங்கு இருப்பதுபோல் அமரர் ஊர்தியும் இருக்க வேண்டும் என சமுக ஆர்வளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டைக்கு அமரர் ஊர்தி வர கால அவகாசம் நிறைய எடுத்து கொள்கிறார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.