Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் மதியநல்லூர் அரசு பள்ளி முதலிடம்

இலுப்பூர், அக்.10: அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் மதிய நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாலச்சந்திரன் உடற்கல்வி ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினார்.