Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதி 2வது நாளாக பரவலாக மழை

பொன்னமராவதி, அக். 10: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் 2வது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடும் வெப்பம் வாட்டியது.

இந்நிலையில் நேற்று பொன்னமராவதி, கொப்பனாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பொன்னமராவதி நகரில் ஒரு சில இடங்களிலும், பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இரண்டு நாட்கள் மழை பெய்துள்ளது.