Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி பொன்னமராவதியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பொன்னமராவதி, அக். 10: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை முன்னிட்டு பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு தவெகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மாவட்ட இணைச்செயலாளர் சண்முகம் தலைமையில் நகரச்செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சுரேஷ், பிரபு,உதயகுமார் நிர்வாகிகள் ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு இடங்களில் தவெக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடடினர்.