இலுப்பூர், செப். 10: இலுப்பூர் சின்னக்கடை வீதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சில குடிநீர் வினியோகம் செய்யும் பைப்புகள் இலுப்பூர் சின்னக்கடை வீதி வழியே செல்கிறது. இந்த சின்னக்கடைவீதி சாலை இலுப்பூர்-புதுக்கோட்டை பிரதான சாலையாகும்.
இச்சாலை வழியே அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்த சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது. இதனால் தன் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே வீணாகும் குடிநீர் உடைப்பை சீரமைக்கு வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


