பொன்னமராவதி, செப். 10: பொன்னமராவதி அருகே ஆலவயலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் சமுதாயக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதன்பிறகு புதுகை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அரசின் சார்பில் கண் சிகிக்கை முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக ஆலவயலில் நடைபெற்ற முகாமிற்கு புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரகாஷ், சுகதாரணி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆலவயல் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்களுக்கு கண் பரிதோனை செய்தனர். இதில் கண்அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிகழ்வில் ஆலவயல் ஊராட்சி செயலாளர் பஞ்சவர்ணம் செம்பன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


