இலுப்பூர், செப். 10: அன்னவாசல் அருகே டூவீலரிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மண்ணவேளம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (47). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் அன்னவாசலுக்கு சொந்த வேலைக்காக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது மண்ணவேளம்பட்டி சாலை அடைக்கன்குளம் அருகே சென்றபோது நிலை
தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


