Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மணல் கடத்திய டிரைவர் சிறையில் அடைப்பு

விராலிமலை, அக் 9: மாத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி 3 யூனிட் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்து உரிமையாளர், டிரைவர் மீது வழக்கு பதிந்து ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்ேகாட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த மாத்தூர் அருகே ஆற்றுப்படுகைகளிலிருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி டிப்பர், டிராக்டர்களில் மணல் அள்ளி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகலின் பேரில் கோலார்பட்டி எஸ்எஸ்ஐ செந்தில் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோலார்பட்டி குளத்துக்கரையில் இருத்து வெளியே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி கிராவல் மணல் 3 யூனிட் ஏற்றி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையார் மணிகண்டம் முத்துச்சாமி, ஓட்டுநர் குன்னத்தூர் ஆனந்த்(56). ஆகியோர் மீது வழக்கு பதிந்து டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்