புதுக்கோட்டை, அக். 9: புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாதஸ்வர தவில் மங்கல இசை கலைஞர்கள் சங்கம் நடத்தும் 7ம் ஆண்டு இசை விழா மாவட்ட சங்க தலைவர் சோத்துப்பாளை செல்வமணி தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலாளர் நார்த்தாமலை முத்துக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை முதல் இரவு வரை புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்ட நாதஸ்வர தவில் இசைகலைஞர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
அதன்பிறகு மாலை மாவட்ட அளவில் சிறந்த இசை கலைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் தொழிலதிபர்கள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜா வரவேற்றார். முடிவில் முன்னாள் சங்கச் செயலாளர் அன்பு நன்றி கூறினார்.


