கறம்பக்குடி, செப். 9: கறம்பக்குடி அருகே சேதமடைந்த தார்சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மழையூர் அருகே வெள்ளாள விடுதி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் வெள்ளாள விடுதி ஊராட்சியில் அனைத்து அரசு கட்டடங்களும் அமைந்துள்ளது. வெள்ளாள விடுதி கடைத்தெரு பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் நலன் பயன்பெறும் வகையில் தார்சாலை அமைக்கப்பட்டது.
அந்த தார் சாலையானது தற்போது சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக காணப்படுகின்றன. தற்போது மண் சாலையாகவே மாறி விட்டன ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் அப்பகுதி மக்களின் நலன் கருதி சேதமடைந்த தார்சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


