Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதிக்கு காலைநேர பேருந்து திடீர் நிறுத்தம்

பொன்னமராவதி, செப். 9: புதுக்கோட்டையில் இருந்து அரசமலை, காரையூர் சடையம்பட்டி, மரவாமதுரை, கங்காணிப்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல், தூத்தூர் வழியாக பொன்னமராவதிக்கு ஒரு அரசு பேருந்து காலை நேரம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் இப்பகுதி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வர ஏதுவாக இருந்தது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு பயன் உள்ளதாக இருந்தது. இந்த பேருந்து கடந்த வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகளிடம் பேசினர். இதனையடுத்து மீண்டும் இந்த பேருந்து இயக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 8ம்தேதி மற்றும் நேற்று முன்தினம் 7ம்தேதி என கடந்த இரண்டு நாட்கள் இந்த பேருந்து இயக்கப்படவில்லை. இதனையடுத்து இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அடிக்கடி இந்த பேருந்து நிறுத்தப்படுகின்றது. தொடர்ந்து இது போன்று அலட்சியப்போக்குடன் செயல்படும் போக்குவரத்துறை கண்டித்தும் தடையின்றி தொடர்ந்து உரிய வழித்தடத்தில் இந்த பேருந்தினை இயக்க கோரி பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.