கறம்பக்குடி, அக். 8: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உணவு ஊட்டச்சத்து மற்றும் தன் சுத்தம் தொடர்பான வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி, கோளப்போட்டிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார இயக்க மேலாளர் ஸ்ரீபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி உதவிக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


