புதுக்கோட்டை, அக். 8: புதுக்கோட்டையில் போஸ்டர்களை தடுக்க மாநகராட்சி சார்பில் சுவர்களில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. என்று மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை நகரின் பிரதான சாலைகளில் அமைந்திருக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு கட்டிட வளாகங்களின் சுற்றுச்சுவர்களில் போஸ்டர்களை ஒட்டப்படுவதை தவிர்க்கவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வண்ணமயமான ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக புதுகை மாநகராட்சி அலுவலக வளாகத்தின் சுற்றுச்சுவர்கள் மற்றும் மாநகராட்சி ஆய்வு மாளிகை சுற்றுச்சுவர்களில் பல்வேறு கலை நயமிக்க வண்ண ஓவியங்கள் வரைந்தனர். போஸ்டர்களால் நிரம்பி வழிந்த சுவர்கள் தற்போது அழகிய ஓவியங்களால் மிளிர்வது, அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


