கறம்பக்குடி, ஆக.8: வாண்டான்விடுதி ஊராட்சியில் பழுதடைந்த ஊராட்சி நிர்வாக அலுவலக கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் அமைந்துள்ளன. வாண்டான்விடுதி ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சிக்கு சொந்தமான ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
நாளடைவில் அந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமானது மிகவும் பழுதடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. மேலும் குறிப்பாக அந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் நூலக கட்டிடம் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகின்றன குறிப்பாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அலுவலகத்தில் தினந்தோறும் அலுவலகப் பணியில் நடைபெற்று வரும் வேளையில் ஒருவித பயத்துடனே வந்து செல்கின்றனர்.
எனவே அனைத்து தரப்பினர் பொதுமக்களின் நலன் கருதி வாண்டான விடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய கட்டிடம் அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



