Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசை அகற்றி மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூ. மக்கள் சந்திப்பு நடை பயணம்

அறந்தாங்கி, ஆக. 8: அறந்தாங்கி அருகே ஒன்றிய அரசை அகற்றி மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பாஜ ஆட்சியை அகற்றி மாற்றத்தை உருவாக்க நாடு முழுவதும் ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் 15-ம் தேதி வரையில் நடைபெறும் நடைப்பயண பிரச்சார மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் அத்தாணி, திருவாப்பாட, ஏகப்பெருமகளூர், கண்டிச்சங்காடு, நாகுடி, ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நடை பயணத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஒன்றிய துணைச் செயலாளர் போஸ் கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.