கந்தர்வகோட்டை, ஆக. 7: கந்தர்வகோட்டை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் ஏற முடியாமல் திணறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு போக்குவரத்து பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் நகர்பகுதிக்கும் கிராம பகுதிக்கும் இயக்கபடுகிறது. இதனால் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.
பேருந்து நிலையதரை தளம் பெயர்ந்து இருப்பதால் பேருந்து நிலைய நுழைவு வாயில் அதிக அளவில் பள்ளமாக இருப்பதால் பேருந்து வந்து செல்ல சிரமாக உள்ளது. பள்ளத்தில் செல்லும் போது பேருந்தில் எதேனும் பழுதாகிறது. என கந்தர்வகோட்டை பேரூராட்சி நிர்வாகம் கள ஆய்வு செய்து பேருந்து நிலைய தரை தளத்தை சீர் செய்து பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் வந்து செல்ல விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.



