அறந்தாங்கி, செப்.5: அறந்தாங்கி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்க ரயில் இஞ்சின் சோதணை ஓட்டம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இயக்க மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முன்தினம் இரவு தெற்கு ரயில்வே சார்பில் மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம் இஞ்சின் அறந்தாங்கி ரயில் நிலையம் வழியாக வந்தது.
இந்த மின்சார ரயில் சோதணை ஓட்டத்திற்கு வந்த ரயில் இஞ்சினை அறந்தாங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் ரயில் நிலையத்தில் நின்று வரவேற்றனர். விரைவில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் வந்து செல்ல உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


