பொன்னமராவதி,செப்.5: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் கண்டறியும் முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாப்பட்டி ஷைன் லையன் சங்கத்தின் சார்பாக ரத்த சக்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் கண்டறியும் பரிசோதனைகள் கொப்பனாபட்டி ஆலவயல் சந்திப்பு என்ற இடத்தில் நடந்தது. கொப்பனாப்பட்டி ஷைன் லையன் சங்கத்தின் தலைவர் முத்து தலைமைவகித்தார்.
செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ராஜா, சாசன மற்றும் வட்டார தலைவர் மாரிமுத்து, முன்னாள் மண்டல தலைவர் சிங்காரம், மாவட்ட காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். முன்னாள் வட்டார தலைவர் முருகன் கோல்டன் உமன் லையன் சங்கத்தின் செயலாளர் சகோதரி கண்ணகி முருகன் ஆகியோர் முகாமினை நடத்தினர். இதில் 100பேரூக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


