Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாரணமங்கலத்தில் கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

பாடாலூர், செப்.5: நாரணமங்கலத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் ரவி (42). கொத்தனார் வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மதியம் காரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று மீண்டும் வீடு இரவு திரும்பினார். இந்த நிலையில், ரவிக்கும் அவரது மனைவி மகாலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அவரது மனைவி மகாலட்சுமியும், மகன் சந்திவ்நாதனும் வீட்டுக்குள் சென்று தூங்கினர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ரவி வீட்டுக்குள் இல்லாததால் சந்தேகமடைந்த மனைவியும், மகனும் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள ஆஸ்பெட்டாஸ் கூரை பகுதியில் ரவி தூக்கில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.