புதுக்கோட்டை, ஆக. 5: கீரனூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதி 15 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 பேர் காயமடைந்தனர். கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி நகரப் பேருந்து வந்தது. குளத்தூர் அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், நகர பேருந்தை ஓட்டி வந்த ஊரப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (51), கல்லுக்குவியல்பட்டியை சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவி நித்தியபாலா (16),
முத்துடையான்பட்டியைச் சேர்ந்த 12ம்வகுப்பு மாணவி சிதம்பரதேவி (17) மற்றும் 12 பெண்கள் காயமடைந்தனர். பின்னர் கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த நகர பேருந்து டிரைவர் ராஜேந்திரன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

