Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு விநியோகம்

புதுக்கோட்டை, ஆக. 5: புதுகையில் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா ஆடிப்பெருக்கை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் விநியோகம் செய்யப்படும் காய்கறி விதை தொகுப்புகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த காய்கறி விதை தொகுப்பில், வெண்டை, தக்காளி, கத்திரி, கீரை, கொத்தவரை ஆகிய ஐந்து வகையான விதைகள் அடங்கியுள்ளன.

இந்த தொகுப்பு முழு விலையில் ரூ.25 என அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் இந்த காய்கறி விதை தொகுப்புகளை வாங்கி தங்களது வீட்டு தோட்டங்களில் பயிரிட தோட்டக்கலை துணை இயக்குநர், தெரிவித்தார். இதன் மூலம் அன்றாட உணவிற்கு தேவையான நஞ்சு இல்லா ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை அறுவடை செய்து ஆரோக்கியமான வாழ்வை பெறலாம் என்று கூறினர்.