புதுக்கோட்டை, நவ.4: புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் இருந்து விறகு ஏற்றிய லாரி புதுக்கோட்டை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனர் மதியழகன் லாரியை ஓட்டிவந்தார்.
லாரி எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி நிலைகுலைந்து லாரியில் இருந்த அனைத்து விறகுகளும் சாலையில் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனர் மதியழகன் போதையில் இருந்ததாகவும் அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


