Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பொன்னமராவதி கடைவீதிகளில பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க அதிகாரிகள் ஆய்வு

பொன்னமராவதி, நவ. 4:பொன்னமராவதி கடைவீதிகளில தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் வழங்குவது குறித்து இலுப்பூர் ஆர்டிஓ கோகுல் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு முறையான தீயணைப்பு கருவிகள் உள்ளனவா? காற்றோட்டமான இடம் இருக்கிறதா? பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கிறதா? என்பதை இலுப்பூர் ஆர்டிஓ கோகுல் சிங். பட்டாசு கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பொன்னமராவதி தாசில்தார் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் பூமிநாதன் அகஸ்டின் அமல்நாதன் மற்றும் கிராம உதவியாளர் ராபர்ட் உடன் இருந்தனர்.