அறந்தாங்கி, நவ. 4: அறந்தாங்கி நகராட்சியில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் செய்தனர். மேலும் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் நிவேதிதா அறிவுறுத்தலின்படி நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது 12 கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 150 கிலோ அளவிலான கேரிபேக், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 8 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


