பொன்னமராவதி, பிப். 4: பொன்னமராவதி பகுதியில் திமுகவின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலையில் திமுக அரசின் சாதனைகளை மகளிர் அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கட்சி நிர்வாகிகள் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்து விளக்கினர்.
இதில் நிர்வாகிகள் ஆலவயல் முரளி சுப்பையா, மருது மற்றும் மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல தொட்டியம்பட்டி ஊராட்சியில் மாவட்ட பிரநிதி சிக்கந்தர், ஒன்றிய துணை செயலாளர் பாண்டியன், தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதே போல வாழைக்குறிச்சியில் மாவட்ட பிரநிதி வாழை ராஜன், சுந்தரத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் விஜயன், ரெட்டியப்பட்டியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சீமாட்டி லத்திப், கல்லம்பட்டி, ஆலவயல், மேலைச்சிவபுரி, செவலூர், மலம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் திமுகவின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

