Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விராலிமலை சீத்தகாட்டுபட்டி கழிவறை இடித்ததை கண்டித்து தாலூகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

விராலிமலை, ஜூன் 3: தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாக கூறி குடியிருப்பின் அருகில் இருந்த கழிவறை இடிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அரசு அதிகாரிகளை கண்டித்து விராலிமலை தாலூகா அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விராலிமலை அடுத்துள்ள சீத்தகாட்டுபட்டியை சேர்ந்தவர் ஆரியமாலா. இவர் இடிக்கப்பட்ட கழிவறை அருகே வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.

அவர் கட்டியுள்ள கழிவறை அருகில் குடியிருந்து வரும் முருகேசன் என்பவருக்கு கழிவறை இடம் சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று பொக்ளைன் இயந்திரம் மூலம் கழிவறையை இடித்து தரை மட்டம் ஆக்கியதாக கூறி விராலிமலை தாலூகா அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.