Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கறம்பக்குடி அருகே சிதலமடைந்து பரிதாபமாக காட்சியளிக்கும் மெட்டல் சாலை

கறம்பக்குடி, ஜூன் 3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தீத்தான் விடுதி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் பல்வேறு தெருக்கள் உள்ளன. இதில் கறம்பக்குடி திருவோணம் செல்லும் சாலையிலிருந்து தீத்தான் விடுதி செல்லும் சாலையில் இடதுபுறம் முத்தரையர் தெரு பகுதி அமைந்துள்ளது. இத்தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள மெட்டல் சாலை பழுதாகி குண்டும், குழியுமாக மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தடுமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை புதிப்பிக்கும் வண்ணம், புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென அரசுக்கும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.