Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகசூலை அதிகரிக்க விதை பரிசோதனை அவசியம்: வேளாண்துறை அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 31: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச்செய்வதற்காக தமிழ்நாடு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை யின் கீழ் விதைச்சான்றளிப்பு இ விதை ஆய்வு ,விதைப்பரிசோதனை ,உயிர்மச்சான்றளிப்பு மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பர் 30, இராமலிங்கம் தெரு, திருக்கோகர்ணம் என்ற முகவரியில் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரக கலப்பு கண்டறியப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இவ்விதைப்பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை, விவசாயிகளிடமிருந்தும் விதை விற்பனையாளர்களிடமிருந்தும் விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணிவிதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விதைச்சட்டம் 1966 பிரிவு 7( பி) யின் படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.. இதன்படி நெல்லுக்கு 80 சதவிகிதமும், வீரிய மக்காச்சோளத்திற்கு 90 சதவிகிதமும்;, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, உளுந்து, துவரை, பாசிப்பயறு ஆகிய பயிர்களுக்கு 75 சதவிகிதமும், நிலக்கடலைக்கு 70 சதவிகிதமும், எள்ளிற்கு 80 சதவிகிதமும் காய்கறிப் பயிர்களான கத்திரி, தக்காளி, வெங்காயம்,கொத்தவரை, கீரை வகைகளுக்கு 70 சதவிகிதமும், மிளகாய், பூசணி, பரங்கி,புடல், பாகல், பீர்க்கன், தர்பூசணிக்கு 60 சதவிகிதமும் வெண்டை, கொத்தமல்லிக்கு 65 சதவிகிதமும் முளைப்புத்திறன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ 80 ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த விபரசீட்டுடன் நெல் விதை 50கிராம்இ உளுந்து இ பாசிப்பயறு 100 கிராம் இ மக்காச்சோளம் இ நிலக்கடலை 500 கிராம் இ எள்இ ராகி 25 கிராம் காய்கறிப்பயிர்களான கத்திரி , தக்காளி, மிளகாய் -10 கிராம் ,சுரை, பரங்கி, வெள்ளரி-100 கிராம், பாகல், புடல்-250 கிராம் ஆகிய அளவில் விதைமாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விதையின் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர்சுமித்ராதேவி மற்றும் செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.