புதுக்கோட்டை, செப். 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுகை பிஎல்ஏ ரவுண்டானா அருகே ஓய்வூதியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் எல்ஐசி ஓய்வூதியர் சங்க நிர்வாகி அசோகன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா வாழ்த்தி பேசினார். அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் சங்க மண்டல பொதுச்செயலாளர் லோகநாதன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
+
Advertisement


