பொன்னமராவதி, செப். 30: பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் மக்கள் தொடர்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆர்டிஓ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் வரும் அக்டோபர் 14ம்தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான நாளை அக்டோபர் 1ம்தேதி திருக்களம்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் முன் மனுக்கள் பெறப்பட உள்ளது. அக்-14ம்தேதி நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் இலுப்பூர் ஆர்டிஓ கோகுல்சிங் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் அதிக அளவு பொதுமக்களை பங்குபெற வைப்பது. தாலுகா முழுவதும் இம்முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
+
Advertisement


