புதுக்கோட்டை, செப்.30: புதுக்கோட்டை கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, புதுக்கோட்டை, மாவட்ட சிறையில் புதிதாக மதிப்பூதியத்தின் அடிப்படையில் (மாதம் ரூ.15,000/- ரூ. 15,000 மட்டும்) சமூக இயல் வல்லுநர் (பணியிடம் 1 எண் நிரப்பம் செய்வதற்காக தகுதி உள்ள நபர்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி மற்றும் வயது விவரம்: முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு பொதுப்பிரிவு முன்னுரிமை அற்றவர் (வயது வரம்பு 01.07.2026 அன்றைய தேதியில் பின் வருமாறு நிறைவுற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது) ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் (SC , ST , SCA): 35 வயது, பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (BC / MBC): 32 வயது மற்றும் இதர பிரிவினர், பொதுப்பிரிவினர் (OC): 30 வயது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனைத்துகல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோஅல்லது தபால் மூலமாகவோ 28.09.2026 முதல் 12.10.2026அன்று மாலை 05.45 மணி வரையில் கீழ்க்கண்ட முகவரிக்குகிடைக்குமாறு அனுப்பி வைத்திடுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது


