கறம்பக்குடி, அக். 28: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவனுக்கு அண்ணாபிஷேகம் நடைபெற்றது. சிவலிங்கத்திற்கு காய்கறி, பழங்கள், சாதத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. அன்னம் தயிர், தேன், பழங்களுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பக்த லலிதேஸ்வரர் தாயினும் நல்லவள் சிவன் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவி ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார். இதேபோல் வெட்டன் விடுதியில் உள்ள கச்சத்தான் புஞ்சை தெற்கு வாண்டான் விடுதி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலையத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல கறம்பக்குடியில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


