Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பிரதமர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!!

புதுக்கோட்டை, அக்.28: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு 2026-27ம் கல்வியாண்டின் தொழிற்கல்விக்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

இத்திட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும். கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு மாணவர்களுக்கு ரூ.30,000மும் மாணவிகளுக்கு ரூ.36,000மும் வழங்கப்படும். இவை முன்னாள் படைவீரர்களின் 2 சிறார்களுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும் விபரங்களுக்கு ksb.gov.in < http://ksb.gov.in/ > என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இக்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 31.12.2026 ஆகும். மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.