புதுக்கோட்டை, செப். 28: சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடகாடு பேப்பர் மில் ரோடு மற்றும் மாங்காடு பகுதிகளில் பைக்கில் வைத்து சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மாங்காடு உசிலங்கொல்லை பகுதியை சேர்ந்த குமரேசன் (46). என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், இரு சக்கர வாகனம், ரூ. 1570, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.. மேலும் கடைகளில் மதுபான விற்பனை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
+
Advertisement


