Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அறந்தாங்கியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கிளை கூட்டம்

அறந்தாங்கி, செப். 28: அறந்தாங்கியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் பன்னீர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு முடிவுகளை பற்றியும் இன்றைய அரசியல் சூழல் பற்றியும் விளக்கினார். ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பணிகல் பற்றியும் ஒன்றிய குழு முடிவுகளை பற்றியும் பேசினார்.

கூட்டத்தில் விஜயபுரம் ஊராட்சியில். ஊராட்சி நிர்வாகத்திற்கு நிரந்தர ஊராட்சி செயலர் நியேமிக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபுரம் பெரிய ஏரிக்கு வருகிற அம்முனிச்சத்திரம் வாய்க்காலில் இருந்து 4 நம்பர் துழுசு வழியாக வருகிற கிளை வாய்க்காள் புதர்ச்செடிகள் மண்டி கிடப்பதால் ஏரிக்கு வருகிற தண்ணீர் வராமல் ஏரி வறண்டு தண்ணீரின்றி காணப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் சரி செய்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயபுரம் வடக்கு பகுதியில் உள்ள மேல் நீர்தேக்க தொட்டி முற்றிலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அந்த நீர் தேக்கத்தொட்டியை இடித்து விட்டு புதிய நீர் தேக்க தொட்டிகட்டித் தரவேண்டும். விஜயபுரம் வடக்கு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளிக்கு சுற்று சுவர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுப்பிரமணியபுரம் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பரவி வரும் மரும காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய கோரியும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 30-ந் தேதி, காலை 10 மணிக்கு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெரும் ஆர்ப்பாட்டத்திற்கு நம் பகுதியில் உள்ள விவசாயிகள், மற்றும் பொதுமக்களை திரட்டி பங்கேற்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், மேகலா, சத்யா, அலகேஸ்வரி,சித்ரா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.