Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுகை தேவஸ்தானம் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்: உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு

புதுக்கோட்டை, ஜூலை 28: புதுகை தேவஸ்தானம் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுக்கோட்டை கோயில்கள் தேவஸ்தான பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று உதவி ஆணையர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை- தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும். தேவஸ்தானத்தில் பணிபுரியக் கூடிய பணியாளர்கள் சர்வீஸ் ரெக்கார்டர் புதுப்பிக்க வேண்டும். புதிய பணியாளர்களின் சேர்க்கையை சர்வீஸ் ரெக்கார்டர் பதிவிட வேண்டும்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் 95 சதவீத உம்பளப் பணியாளர்களே அதை கருத்தில் கொண்டு உம்பள நிலங்களின் மூலம் வரக்கூடிய பலன்களை அந்த பணியாளர்கள் அனுபவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போதைய விலைவாாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்திட வேண்டும். தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் சம்பளத்தை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கவும் அந்த மனுவில் தெரிவித்தனர்.