Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 27: ஒன்றிய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலகியதை வரவேற்ற அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் கோரிக்கை முழக்கப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மகாதீர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வசந்தகுமார், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுசிலா, உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தமுஎகச மரபு கலை கிளையின் சிலம்பாட்டம் மற்றும் ட்ரம்ஸ் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.