Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டையிலிருந்து சமயபுரம் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

கந்தர்வகோட்டை, ஜூலை 27: கந்தர்வகோட்டையிலிருந்து சமயபுரம் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிய வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி, மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, மல்லிகை நந்தம், புதுப்பட்டி மோகனூர், பெரியகோட்டை, வீடடிப்பட்டி, காட்டு நாவல், துலுக்கன்பட்டி, அம்மா புதுப்பட்டி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, நெப்புகை, வடுகப்பட்டி, வாண்டையான்பட்டி,

கோமாபுரம், கொத்தகம், பிசானத்தூர், புதுநகர், உள்ளிட்ட பகுதியிலிருந்து திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாததை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து திரளான பக்தர்கள் மஞ்சள், சிவப்பு உடை அணிந்து பாதயாத்திரையாக சமயபுரம் சென்று அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கம். இதேபோல் நிகாழண்டும் நடைபெறுகிறது. இரவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. எனவும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிந்து செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள்

தெரிவித்தார்.