Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தூய்மையான சுகாதாரமான சுற்றுச்சூழல் உருவாக்க பட்டிமன்றத்தில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை, செப்.26: புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி அரங்கத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து நடத்தும் ‘குப்பைகளை தரம் பிரிப்பதில் உள்ள சிக்கல் விழிப்புணர்வு இன்மையா? அல்லது பழக்கத்தை மாற்றி கொள்ள மறுக்கும் பிடிவாதமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பட்டிமன்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா,நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்ததாவது:

நமது சுற்றுச்சூழலை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பதில் குப்பைகளை முறையாக கையாள்வது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, வீடுகள் உள்ள குப்பைகளை பிரித்து வழங்குவது என்பது சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக அமைகிறது. குறிப்பாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து வழங்கும் பழக்கத்தை அன்றாட வாழ்க்கையின் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அவை முறையாகச் சேகரிக்கப்பட்டு பூமிக்கு உரமாக மாற்றப்படுகிறது.