பொன்னமராவதி, செப்.26: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் இணைய வழி (சைபர் கிரைம்) பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியில் அரசு உதவிபெறும் கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அழகம்மை, முடியரசன், பேராசிரியர் ராஜா, குறிஞ்சி நூலகர் தெய்வானை ஆகியோர் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர். பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் சட்டவிரோத செயல்கள், சைபர்கிரைம் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகளுக்கான எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களை தடுக்க பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்றும், பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.


