புதுக்கோட்டை, செப். 25: புதுகை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகர பகுதிக்கு உட்பட்ட உடையனேரி பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சீரான குடிநீர் விநியோகம், மின்சார இணைப்பு மற்றும் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி உடையனேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் வீடுகளுக்கு முறையான மின்சார இணைப்பு மற்றும் போக்குவரத்திற்கு ஏற்ற சாலை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்காக அவதிப்பட்டு வந்தனர்.
+
Advertisement


